லடாக்கை சேர்ந்த பா.ஜ.க எம்.பி கூறிய உண்மை கருத்து என்ன.. சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி..
By : Bharathi Latha
லடாக்கை சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஆக இருப்பவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி ஆதரிப்பது குறித்து தவறான செய்தியை மேற்கோள் காட்டு சமூக ஊடகங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. "லடாக் எம்.பி., மோடியை ஆதரிப்பது அவரது மோசமான முடிவு" என்று கூறவில்லை இந்த மேற்கோள் போலியானது என்பதை இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. லடாக்கில் எம்.பி ஆக இருப்பவர் ஜாம்யாங் செரிங் நம்கியால் அப்படியொரு கருத்தை தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஏப்ரல் 23 அன்று, பாரதிய ஜனதா கட்சி லடாக்கிலிருந்து அதன் வேட்பாளராக தாஷி கியால்சனை அறிவித்தது. லடாக்கின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு சீட் வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, BJP கட்சியை விமர்சித்து நம்க்யால் கூறியதாகக் கூறப்படும் கருத்து சமூக வலை தளங்களில் வைரலானது. குறிப்பாக இது அவருடைய புகைப்படத்துடன், ஒரு பேஸ்புக் பயனர் கருத்து தெரிவிக்கும் போது, “பாஜகவில் சேர்ந்து மோடியை ஆதரிப்பது எனது மோசமான முடிவு, அவருடைய தந்திரங்கள் எனக்குத் தெரியாது, லடாக் மக்கள் என்னை மன்னிக்கவும். - ஜாம்யாங் செரிங் (லடாக்கிலிருந்து பாஜக சிட்டிங் எம்.பி.)" என்று அவரை கூறியதாக ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது வைரலானது.
இந்த வைரலான மேற்கோள் தொடர்பாக எம்.பி.யின் அதிகாரப்பூர்வ கணக்கில் ஒரு X பதிவையும் கண்டோம். "வைரலான அறிக்கை போலியானது என்றும், பிரதமர் மோடியையும் கட்சித் தலைமையையும் மதிக்கும் உண்மையான பா.ஜ.க தொண்டர் தான்" என்றும் கூறினார்.
Input & Image courtesy: News