Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி பேரணியில் மக்கள் கூட்டம் இல்லையா.. வைரல் ஆகி வரும் வீடியோவின் உண்மை என்ன..

பிரதமர் மோடி பேரணியில் மக்கள் கூட்டம் இல்லையா.. வைரல் ஆகி வரும் வீடியோவின் உண்மை என்ன..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 May 2024 12:14 PM GMT

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரதமர் மோடியை காலி நாற்காலிகளா வரவேற்றன? சமூக வலைத்தளங்களில் பரவி விடும் வீடியோவில் உண்மை என்ன? இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்படவில்லை. இந்த வீடியோ பிரதமரின் ஜாம்நகர் பேரணியின் வீடியோ அல்ல என்று இந்தியா டுடே இன்று உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்து உள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த வித்தியாசமான பேரணியில் இருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகளை தற்போது சமூக வலைதள வாசிகள் சில இதனை வேண்டுமென்று மாற்றி இருக்கிறார்கள்.


மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற பிரதமர் பேரணியில் வரிசையாக காலி இருக்கைகள் இருப்பதைக் காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பேரணியில் அவர் பேச்சு கேட்பதற்கு யாரும் வரவில்லை என்றும், இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.


மாலையில் பதிவான வீடியோவில் , பிரதமர் மோடி பேசும்போது பலர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது. ஒரு முகநூல் பதிவில், "குஜராத் மாடல். மோடிஜியின் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவரைப் பார்க்க நாற்காலிகள் காலியாக இருந்தன, ஆனால் மோடி ஜி தனது வேலையை முடித்துவிட்டு சென்றார். மோடி ஜி, பேரணியில் கலந்துகொள்ள மக்களுக்கு இன்னும் பணம் தேவைப்படலாம். லட்சக்கணக்கான மக்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மோடி ஜியின் உரையைக் கேட்க திரண்டது எப்படி கூட்டம் நிரம்பி வழிகிறது? என்பதைப் பாருங்கள்!" என்று இந்த வீடியோவை வைரம் செய்து இருக்கிறார் ஆனால் இதை முற்றிலும் தோல்வியானது யாரோ வேண்டுமென்று இந்த வீடியோவை எடிட்டிங் செய்து சமூக வலைத் தளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: India Today News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News