கர்நாடகா நகை கடையில் நடந்தது குண்டுவெடிப்பா.. பரவி வரும் வீடியோவில் உண்மை தன்மை என்ன?
By : Bharathi Latha
கர்நாடகாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், பலத்த காயம் அடைந்த ஒரு நபர் புகை நிறைந்த கடையில் இருந்து காரில் அழைத்துச் செல்லப்படுவதைக் காணலாம், மற்றவர்கள் பீதியில் தப்பினர். குறிப்பாக இந்த ஒரு குண்டு வெடிப்பிற்கு தீவிரவாதிகள் பின்னணியில் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில், கர்நாடகாவின் பெல்லாரியில் ஏ.சியில் எரிவாயு நிரப்பப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாக இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.
இது குறித்த சமூக வலைதள வாசிகள் குறிப்பிடும் பொழுது, “பிரேக்கிங் எச்சரிக்கைகள். பாரதம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் வெடிகுண்டு வெடித்தது. பயங்கரமான குண்டுவெடிப்பால், பலர் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் தாக்குதலா?" என்று குறிப்பிட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இது இது குண்டுவெடிப்பு அல்ல, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் நடந்த விபத்து என்று இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடகா போலீசார் X-இல் விளக்கம் அளித்தனர். அந்த பதிவில், “ஏர் கண்டிஷனர் கேஸ் வெடிப்புதான் காரணம். விசாரணை தொடர்கிறது. வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளுக்கு செவிசாய்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து உள்ளார் காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார். "கடையில் ஏர் கண்டிஷனிங் பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் அதில் எரிவாயுவை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எரிவாயு நிரப்பப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். கல்யாண் ஜூவல்லர்ஸ் ஸ்டோர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏ.சி சர்வீஸ் சென்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.
Input & Image courtesy: India Today