அங்கன்வாடியை கூட விட்டுவைக்காத தி.மு.க பிரமுகரின் மகன்... மது பாட்டிலுடன் ரீல்ஸ் வெளியிட்டதால் பரபரப்பு...
By : Bharathi Latha
இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூக வலைத்தளங்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவர்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறையும் நாம் ஏற்படுத்த விடக்கூடாது என்ற ஒரு எண்ணம் இல்லை. அதற்கு மாறாக பொது இடங்களில் நாம் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம்? யார் என்னை கேள்வி கேட்பது? என்ற வகையில் தற்பொழுது பல்வேறு இடங்களில் மிக சுலபமாக ரிலீஸ் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் கூட திருச்சி ரயில் நிலையத்தில் ரிலீஸ் எடுத்த நான்கு பெண்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தார்கள்.
அந்த ஒரு பிரச்சனை தற்போது முடிந்த பின், திமுக பிரமுகரின் மகன் அங்கன்வாடி மையத்தை பாராக மாற்றி அங்கு ரீல்ஸ் எடுத்து இருக்கிறார். வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மது குடித்து சிகரெட் புகைத்து பட்டாக் கத்திகளுடன் கேங்ஸ்டர் போல ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வரும் இந்த ஒரு வீடியோ முற்றிலும் உண்மைதான். சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இப்படி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டால் நாளைய தலைமுறை என்னவாகும்.
வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானசேகரன். இவரது மகன் சரண். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மது குடித்து சிகரெட் புகைத்து பட்டாக் கத்திகளுடன் கேங்ஸ்டர் போல ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக திமுக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Input & Image courtesy:News