வீர சாவர்க்கரை அண்ணாமலை 'விமர்சனம்' செய்யும் வீடியோ.. எடிட் செய்யப்பட்டதா?.
By : Bharathi Latha
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இடம்பெறும் வைரலான வீடியோ, இந்து தேசியவாத சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரை அண்ணாமலை இழிவுபடுத்துவதாகக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், அண்ணாமலை, "சாவர்க்கர், ஆங்கிலேயரின் காலணிகளை நக்கினார் என்று அவரைப் பற்றி பொதுவாகச் சொல்லப் படுகிறது" என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.
11 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் 'உண்மையை வெளிப்படுத்தும் ஆட்டுக்குட்டி' அண்ணாமலை கட்சியில் சேர்வதற்கு முன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படி கூறியிருக்கிறார் என சமூக வலைதள பயனாளர் ஒருவர் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ கிளிப்பில் மலையாளத் திரைப்படத்தின் காட்சியும் இருந்தது. இதில் நடிகர் மோகன்லால் பிரிட்டிஷ் அதிகாரியின் காலணியை நக்கும் காட்சியும், சாவர்க்கரைப் பற்றி கூறப்படும் வீடியோவில் அண்ணாமலை என்ன சொல்கிறார்? என்பதை விவரிக்கிறது.
பாஜகவில் சேருவதற்கு முன்பு சாவர்க்கரைப் பற்றி அண்ணாமலை கூறியதாகக் கூறி ஒரு X பயனர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். "இந்த வீடியோவை இரண்டு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். அண்ணாமலை பாஜகவில் சேரும் முன்" என்று கருத்துக்களை பகிர்ந்து இருப்பது முற்றிலும் உண்மையா? இதன் பின்னணி என்ன? என்று தேடும் பொழுது இது எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே, அண்ணாமலை சாவர்க்கரை 'விமர்சனம்' செய்யும் வீடியோ எடிட் செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் பகிரப்பட்டு வருகிறது. இந்த கருத்து தவறானது.
Input & Image courtesy:NDTV News