தேர்தல் தோல்வியில் அண்ணாமலை உடைந்து போனாரா? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
By : Bharathi Latha
பாஜக தலைவர் அண்ணாமலையை சித்தரிக்கும் வைரலான வீடியோ, தமிழகத்தின் லோக்சபா தேர்தல் முடிவுகளைக் கண்டு தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் அண்ணாமலை உடைந்து போனார் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதன் பின்னால் உள்ள சித்தரிக்கப்பட்ட உண்மை இதோ, லோக்சபா தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடைந்து விட்டார். இவ்வளவு முயற்சிகள் பண்ணியும், மக்கள் வாக்குகளை செலுத்தவில்லை என்று தேர்தல் முடிவுகளை கண்டு உடைந்து விட்டார் என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
சமீபத்திய லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் எந்த இடத்தையும் பெறவில்லை. மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, தலைவர் அண்ணாமலை தேர்தல் முடிவு காரணமாக உடைந்து போவதைக் காட்டுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட பல்வேறு நபர்கள் சமூக வலைத்தளங்களில் இதை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் இது முற்றிலும் சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ தான். ஏற்கனவே பழைய ஒரு நிகழ்வை எடுத்து அதில் புதிய ஒரு தகவலை கொடுத்து மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அண்ணாமலை அவர்கள் தேர்தல் முடிவுகளை கண்டு துவண்டு போய் விடவில்லை. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக முதியோர்களிடம் பேசும் பொழுது, அண்ணாமலை உணர்ச்சிவசப்பட்டு உடைந்தார். அந்த ஒரு தருணத்தை தவறாக பயன்படுத்தி தவறான வீடியோக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ உண்மையில் ஏப்ரல் 17, 2024 அன்று லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தினமலர் செய்தி ஊடகத்தின் வீடியோவில், அண்ணாமலை கோவையில் முதியவர்களிடம் பேசுவதைக் காட்டும் வீடியோ தான் அது. கோயம்புத்தூரில் முதியவர்களிடம் பேசும்போது தமிழக பாஜக தலைவர் உணர்ச்சி வசப்பட்டதாக ஏசியாநெட் நியூஸின் ஏப்ரல் 2024 அறிக்கை உறுதிப்படுத்தியது.
Input & Image courtesy: News