Kathir News
Begin typing your search above and press return to search.

பொய் செய்தியை வெளியிட்டதா சன் டிவி? ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு.. இந்துமுன்னணி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..

பொய் செய்தியை வெளியிட்டதா சன் டிவி? ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு.. இந்துமுன்னணி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Jun 2024 1:56 PM GMT

சன் டிவி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக தவறான தகவல்களை வெளியிட்ட காரணத்திற்காக தற்போது இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று சன் டிவிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் அதை அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை தொகுதியில் பாஜக தோற்றதற்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை வெளியிட்டது சன் நியூஸ். இதுகுறித்து இந்துமுன்னணி சார்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது, "இந்துமுன்னணி அமைப்பிற்கும், இந்துமக்கள் கட்சிக்கும் (அரசியல் கட்சி) வேறுபாடு அறியாமல்தான் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளதா? சன் தொலைக்காட்சியில் வெளியான ஆடியோவிற்கும் இந்துமுன்னணி நெல்லை மாவட்ட செயலாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே பொய் சொல்லி செய்தி வெளியிட்டுள்ளதாக இந்துமுன்னணி குற்றம் சாட்டியுள்ளது.


இந்து மக்கள் கட்சி குறித்த செய்திகளை இந்துமுன்னணி செய்ததாக செய்தி வெளியிட்டு தொடர்ந்து பலமுறை சன் டிவி நிர்வாகம் இந்துமுன்னணி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக வழக்கறிஞர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆடியோவிற்கும், இந்துமுன்னணி இயக்கத்திற்கும், இந்துமுன்னணி நெல்லை மாவட்ட செயலாளராக உள்ள சுரேஷ் என்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பேசியதாக செய்தி வெளியிட்டு அவதூறு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்து முன்னணி RSS அமைப்பின் கிளை அமைப்பாகும். ஆனால் இந்து மக்கள் கட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பு கிடையாது. இது தெரிந்தே வேண்டுமென்றே சன் டிவி நிர்வாகம் இந்துமுன்னணி இயக்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் தொடர்ந்து களங்கப்படுத்தி வருகிறது. சன் குழுமத்தின் நிர்வாக செயல் தலைவர் கலாநிதி மாறன் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியும், உடனடியாக வருத்தம் தெரிவித்து மறுப்பு செய்தி வெளியிடவும் வலியுறுத்தி" இந்து முன்னணி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News