குலதெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்றாரா கவர்னர்? பரவும் தகவலின் உண்மை பின்னணி..
By : Bharathi Latha
தமிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த செய்தியில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான். சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வம் எனவும், எனவே கிராம கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியதாக ஒரு செய்தி பரவியது.
'குல தெய்வங்களைத் தடை செய்ய வேண்டும்' என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த ஒரு செய்தி பாலிமர் நியூஸ் சேனல் வெளியிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு சில நபர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவர்களுடைய பின்னணியை விசாரித்து பார்க்கும் பொழுது, இவர்கள் தவறாக செய்தியை வெளியிட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக பாலிமர் நியூஸ் தாங்கள் இப்படி செய்தியை வெளியிடவில்லை, இது முற்றிலும் போலியானது என்று மறுத்து இருக்கிறார்கள்.
ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் இதுபோன்று எங்கேயும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரண சோகத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் வார்த்தைகள் என்று போலி செய்தி அட்டையை உருவாக்கி உள்ளார்கள்.
Input & Image courtesy:The Commune News