தி.மு.க பொதுக்கூட்டம்.. முடிவில் ஆளுக்கொரு நாற்காலியை எடுத்துக் கொண்டு நடையை கட்டிய மக்கள்..
By : Bharathi Latha
25 ஜூன் 2024 அன்று சென்னை வேளச்சேரியில் திமுக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இக்கூட்டத்திற்கு, டி.கே., சுப.வீரபாண்டியன், கரு.பழனியப்பன், தி.மு.க. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கூட்டம் முடிந்ததும், இருக்கை வசதிக்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்துக்கொண்டு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் வீட்டுக்குச் சென்றனர். குறிப்பாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தலையில் ஒரு நாற்காலியை சுமந்து கொண்டு வீடு திரும்பினார்கள்.
திமுக பொதுக் கூட்டத்தில் நடந்த இந்த ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒருவர் கூறும் பொழுது, "மழை மற்றும் தண்ணீர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, நீங்கள் நாற்காலிகளில் ஏறி அதன் மீது நிற்க நீங்கள் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறீர்களா?" என்று கமெண்ட் செய்து இருக்கிறார்.
மற்றொருவர், "ஒப்புக்கொண்டபடி அவர்களுக்கு தலா ₹300 கொடுத்திருந்தால், அவர்கள் ஏன் நாற்காலிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போகிறார்கள்?" என்று வீடியோவை பகிர்ந்து கிண்டலாக பதில் கூறி இருக்கிறார். உண்மையில் இந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Input & Image courtesy:The Commune News