பாகிஸ்தான் சிறுபான்மை இந்து பெண்களுக்கு தொடரும் பிரச்சனை.. வலுக்கட்டாயமாக மதமாற்றம் நடக்கிறதா?

நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்கிறது. அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு சிறுபான்மையினருக்கு எதிராகப் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் அங்கு நடந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகப் பல சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதிலும் மைனர் சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாகப் புகார்கள் உள்ளன.
இதற்கிடையே அங்கு சிறுபான்மைப் பெண்களை, குறிப்பாக இந்துக்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்வது எப்படி முழு வீச்சில் நடந்து வருகிறது என்பதைப் பாகிஸ்தானில் உள்ள இந்து எம்.பி ஒருவர் அங்கு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது பணிப் பெண்ணாக வேலை பார்க்கும் ஒரு இந்து பெண் தன்னுடைய சொந்த அத்தையின் பெயரால் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக அவருடைய முதலாளியின் நிர்பந்தத்தின் பேரில் இந்த ஒரு நிகழ்வு நடந்ததாகவும் அதன் பெயரில் அவர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி சுனிதாவின் அத்தையால் அவர் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு தன்னை அத்தை வேறொரு முஸ்லிமுடன் திருமணம் செய்து வைத்ததாகவும், குறிப்பாக தன்னுடைய பெற்றோர் மற்றும் தனது சம்மதம் இன்றி இத்தகைய செயலை அவர் அரங்கேற்றியதாகவும் தகவல் வெளிவந்து இருக்கிறது. சுனிதா என்ற இளம் பெண் பாகிஸ்தானில் உள்ள ஜுபைதா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்டு, இஸ்லாமிற்கு மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கூறுகிறார். வேலை பார்க்கும் இந்து பெண்களை இப்படி குறி பார்த்து மதமாற்றம் செய்து, அவர்களை வலுக்கட்டாயமாக வேறொரு இஸ்லாமியர்களுடன் திருமணம் செய்து வைப்பது தற்போது வழக்கமாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் சுனிதா என்ற இளம் பெண்ணும் தன்னுடைய கதையை சொல்லும் பொழுது கேட்பவர்களின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தானில் இந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் 1% ஆக குறைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும், பாகிஸ்தானில் இருந்து இளம் (பெரும்பாலும் மைனர்) இந்து பெண்களின் கடத்தல்கள், கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாயத் திருமணங்கள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. இன்னும், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அங்குத் தொடர்கதையாகி வருவதாகவும் இதை நிறுத்த உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
Input & Image courtesy: The Commune News