Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் மீது பழி போடவே இரயிலை கவிழ்க்க சதியா? யூடியூபர் கைது.. உண்மை என்ன?

மோடி அரசின் மீது பழி போடவே இரயிலை கவிழ்க்க சதியா? யூடியூபர் கைது.. உண்மை என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Aug 2024 6:32 AM GMT

சமூக வலைத்தளங்களின் மூலம் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் சப்ஸ்கிரைப்ர்களை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நபர்கள் வித்தியாச, வித்தியாசமான வீடியோக்களை தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வடமாநிலங்களில் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம்? என்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். குல்சார் ஷேக் என்ற யூடியூபர் ஒருவர் ரயில் தண்டவாளங்களில் சைக்கிள்கள், சோப்புகள், கற்கள் உள்ளிட்ட பலவற்றை ரயில் தண்டவாளங்களில் ரயில்கள் வரும்போது அதனை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.


குறிப்பாக இவருடைய சேனலை அதிகமான நபர்கள் பின்பற்றுவதாகவும் இத்தகைய நபர் போடும் வீடியோக்களை பல்வேறு நபர்கள் பார்த்து கடந்து செல்வதன் காரணமாகத்தான் இவர் கடந்த காலங்கள் முழுவதும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார். தற்பொழுது தான் இவருடைய வீடியோக்கள் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இந்த காணொளியை பார்த்த சட்ட இந்து பாதுகாப்பு என்கிற இந்து அமைப்பினர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் குல்சார் ஷேக் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


மேலும் பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் பெரிய பெரிய கற்களை வைத்து ரயில் விபத்து ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஒரு இஸ்லாமியர் மற்றும் இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இத்தகைய வீடியோக்களை இவர் பதிவிட்டு வருகிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. மேலும் இவருடைய பின்னணியில் யார் இருக்கிறார்? யார் இத்தகைய செயல்களை செய்ய இவரை தூண்டுகிறார்? என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று உத்தர பிரதேச போலீசார் தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News