Kathir News
Begin typing your search above and press return to search.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியதா ஆர்.எஸ்.எஸ்? உண்மை என்ன?

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியதா ஆர்.எஸ்.எஸ்? உண்மை என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Aug 2024 2:42 AM GMT

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144-ஆக உயிர்ந்திருப்பதாக தகவல்கள் வழி வந்து கொண்டிருக்கிறது. இந்த துயரமான நிகழ்வுக் காரணமாக கேரளாவில் 2 நாட்கள் (ஜூலை 30,31) அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. காயமடைந்த 192 நபர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 150 குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவின் மக்கள் நிலச்சரிவினால் ஏற்பட்ட அழிவில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இடதுசாரிககளால் வெறுக்கப்படும் தேசியவாத அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறங்கி சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் இடதுசாரிகளை போற்றும் ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பழைய போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தற்போது நடந்த வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுடன் ஒப்பிட்டு தவறாக சித்தரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். உண்மையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களம் இறங்கி வேலை செய்தார்களா? உண்மை பின்னணி என்ன என்பது தற்போது பார்க்கலாம்.


இடதுசாரி செய்தி நிறுவனமான Alt News மற்றும் YouTurn போன்ற செய்தி ஊடகங்கள் உண்மைகளை அறியாமல் சிறு பிழைகளை மட்டும் குற்றம் சாட்டி ஊடகப் பொய்கள் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ் வயநாட்டில் உதவி செய்யவில்லை என்று சித்தரித்து தவறான பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்கள் செய்யும் உதவிகளை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சில ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களுடைய பழைய காக்கி சீருடை உடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து செய்தியில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை ஒரு பெரிய பூதாகரமான விஷயமாக கிளப்பி, உண்மையில் ஆர். எஸ். எஸ் வயநாட்டு நிலச்சரிவில் எந்த உதவியும் செய்யவில்லை என்று எதிர்மறையாக சித்தரித்து இருக்கிறார்கள். இறுதியாக 2018 கேரள வெள்ளத்தின் போதும், வயநாடு நிலச்சரிவிலும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டது. தற்போதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி தன்னார்வலர்கள் இறந்தவர்களின் உடலைக் கண்டறிவதில் NDRF குழுக்களுக்கு உதவுகிறார்கள், அனைத்தையும் இழந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்க உணவு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள். மேலும் இறந்த நபர்களுக்கு மரியாதைக்குரிய இறுதி சடங்குகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள், ஸ்வயம்சேவகர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதை நிர்வகித்து, அவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதிசெய்கிறார்கள். இந்த தன்னார்வலர்கள் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News