Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்க ரயில் விபத்து.. மோடி அரசை குறிவைத்து திரித்து செய்தி வெளியிடும் காங்கிரஸ் கட்சியினர்..

மேற்கு வங்க ரயில் விபத்து.. மோடி அரசை குறிவைத்து திரித்து செய்தி வெளியிடும் காங்கிரஸ் கட்சியினர்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Aug 2024 8:18 AM IST

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.1 ஆகஸ்ட் 2024 அன்று, உத்திர பிரதேசத்தின் சோன்பத்ராவில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் கூறப்படும் கூற்றை ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த கூற்று உண்மையை சரி பார்த்து இருக்கிறார்கள். இப்போது இந்தியாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, தங்கள் சமூக வலைத்தள கணக்கில் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளது.


தடம் புரண்ட சரக்கு ரயிலின் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள கணக்கில் பகிர்ந்ததை, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை விமர்சித்து, “ரீல் மந்திரி” என்று முத்திரை குத்துவதை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கூறியது, “ரீல் அமைச்சரே, உ.பி., சோன்பத்ராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது. 'சிறிய' சம்பவங்களுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று கருத்துக்களை பார்த்துவிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு நிகழ்வு உண்மை கிடையாது என்று அதிகாரப்பூர்வமான அமைச்சகம் மறுத்து இருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் இருந்து காங்கிரஸ் வேண்டும் என்றே பொய்யான வீடியோக்களை தற்போது பகிர்ந்து அது தற்போது நடக்கும் மோடி ஆட்சியில் நடந்த ஒரு சம்பவமாக சித்தரித்து மக்களை ஏமாற்ற இப்படி முயற்சி செய்கிறார்கள்.

Input & Image courtesy:The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News