Kathir News
Begin typing your search above and press return to search.

த.வெ.க கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும்.. கிளம்பும் புதிய சர்ச்சை..

த.வெ.க கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும்.. கிளம்பும் புதிய சர்ச்சை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Aug 2024 4:48 AM GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. விழாவிற்கு வெள்ளை சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிந்து விஜய் வந்திருந்தார். 2026ஆம் ஆண்டில் இலக்கை அடைய உண்மையாக உழைப்போம், உறுதியாக அடைவோம் என நெஞ்சில் கை வைத்து விஜய் உறுதி மொழி ஏற்க, தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


நேற்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள யானைகளை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை ஒன்று எழுந்து இருக்கிறது. இது தொடர்பான செய்தி தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றி கழகம் கொடி அறிமுக விழாவில் கட்சித் தலைவர் விஜய் அவர்கள் கலந்து கொண்டு கொடியை அறிமுகம் செய்து வைத்தார். காலையில் அறிமுகம் செய்து வைத்த நிகழ்ச்சியில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்து இருக்கிறது.

த.வெ.க கொடியில் உள்ள யானைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் கிடையாது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் பகிரங்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, எங்கள் கட்சிதேசிய அளவிலான கட்சி அதில் உள்ள சின்னமான யானை சின்னத்தை மற்ற கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை தெளிவாக விளக்கி வீடியோவில் விரிவாக பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News