தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை... வைரல் வீடியோவின் உண்மை என்ன?
By : Bharathi Latha
கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ உண்மையில் என்ன நிகழ்ந்தது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வு ஒன்றில், மேலே ஏற்றப்பட்ட கொடி பறக்காமல் சிக்கிக் கொண்டதாகவும், அதனை எங்கிருந்தோ பறந்து வந்த பறவை சரி செய்து, நன்றாக பறக்கச் செய்துவிட்டு சென்றதாகவும் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் சிலர் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், இது உண்மையல்ல. ஆம். இவர்கள் பகிர்ந்து வரும் வீடியோவின் மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட பதிவு நமக்கு காண கிடைத்தது. அதில், தேசியக்கொடி கம்பத்திற்கும், பறவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகக் காண முடிகிறது. இதன்படி, தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்திற்கும், பறவை வந்து அமரக்கூடிய தென்னை மரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது.
கொடி கம்பத்திற்கு பின்னால்தான் அந்த தென்னை மரம் உள்ளது. தேசியக்கொடி ஏற்றப்படும் நேரத்திற்கும், அந்த பறவை வந்து மரத்தில் உட்கார்ந்துவிட்டு, பறந்து செல்லும் நேரத்திற்கும் ஒத்துப் போகும் வகையில் உள்ளது.
Input & Image courtesy: News