திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்.. சந்தேகத்தை ஏற்படுத்திய விஷயம்.. பின்னணி என்ன.?
By : Bharathi Latha
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அவர்கள் தினத்தந்தி நிருபரிடம் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறும் பொழுது, "நான் பொறுப்பேற்றபோது திருப்பதி லட்டுவின் தரத்தை உறுதிசெய்ய தூய மற்றும் தரமான பசு நெய்பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கி இருந்தார். அதே நேரத்தில் லட்டுவின் தரம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் அதிகளவில் புகார்கள் வந்தன. எனவே இதுகுறித்து நெய் வினியோகம் செய்பவர்கள் மற்றும் லட்டு தயார் செய்யும் பணியாளர்களிடமும் ஆலோசனை நடத்தினோம்.
அப்போது தரமான நெய் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். மேலும் தரமற்று வினியோகம் செய்தால் உரிமத்தை ரத்து செய்வோம் என்றும் எச்சரித்தோம். ஒரு கிலோ நெய்யை திருப்பதி தேவஸ்தானம் ரூ.320 முதல் ரூ.411 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இந்த விலைக்கு தூய நெய்யை சப்ளை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுந்தது. எனவே நாங்கள் எங்களுக்கு சப்ளை செய் யப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆய்வகம் மூலம் சோதனை செய்தோம். அப்போது தான் 'ஏ.ஆர்.' டெய்ரி நிறுவனத்தில் இருந்து 5 டேங்கர்களில் வந்திருந்த நெய்யில் தரம் குறைவாக இருந்தது தெரியவந்தது. எனவே அதை உறுதிப்படுத்த மற்றொரு ஆய்வகத்திலும் பரிசோதித்தோம். அப்போது தூய்மையான பால் கொழுப்பு எஸ் அளவு 98.05 முதல் 104.32 வரை இருக்க வேண் டும். ஆனால் இந்த நெய்யில் 23.22 முதல் 116 வரை இருந்தது.
இந்த குறியீடு நெய்யில் சோயாபீன், சூரியகாந்தி, பனை மற்றும் மாடு, பன்றி உள்ளிட்ட இறைச்சி கொழுப்பு இருப்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த நெய் வினியோகம் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மொத்தம் 5 நிறுவனங்கள் நெய் வினியோகம் செய்தார்கள். இப்போது கர்நாடக பால் உற் பத்தி நிறுவனத்திற்கு நெய் வினியோகம் செய்ய அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. ஒரு கிலோ நெய் அவர்களிடம் இருந்து ரூ.475- நம் க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் நெய் உள்பட திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் பொருட்களின் தரம் அறிய ரூ.75 லட்சம் செலவில் உணவு ஆய்வகம் புதிதாக அமைக்கப்படுகிறது" என கூறினார்.
Input & Image courtesy: News