பள்ளியின் முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவம்.. டெல்லியில் திடீர் பரபரப்பு.. உண்மை என்ன?
By : Bharathi Latha
டெல்லியில் பள்ளியின் முன்பாக குண்டு வெடிப்பு சம்பவம் தற்போது நடந்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்., பள்ளிக்கு வெளியே குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோகினி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், சி.ஆர்.பி.எப்., பப்ளிக் பள்ளி அருகே இன்று காலை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக பரவி வந்தார்கள் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் கூறும் பொழுது, இரண்டு தீயணைப்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். வெடிகுண்டு செயலிழப்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
Input & Image courtesy: News