காஷ்மீரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது உண்மையா? பின்னணி என்ன?
By : Bharathi Latha
இன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து அங்கு ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த சம்பவம் ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் நடந்துள்ளது.
மேலும் அதன் அருகே சுற்றுலா வரவேற்பு மையம் உள்ளது. இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் சந்தைக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அப்போது தான் குண்டுவீச்சு சம்பவம் நடந்திருக்கிறது.இது தொடர்பான பல பொய்யான தகவல்களும் சமூக வலைத் தளங்களில் வெளிவந்து இருக்கிறது.ஆனால் தற்போது வரை அங்கு மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கப்படவில்லை.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று ஸ்ரீநகரில் லஷ்கர்-இ- தொய்பாவின் உயர்மட்ட பாகிஸ்தான் கமாண்டர் உள்ளிட்ட இருவரை நேற்று நமது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் கையெறி குண்டு வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Input & Image courtesy:News