வரி பகிர்வில் முடிவை மத்திய அரசு எடுக்குமா? தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர்..

தங்களுக்கு உரிய வரி பகிர்வு அளிக்கப்படுவதில்லை என மத்திய அரசு மீது தென் மாநிலங்கள் குற்றஞ்சாட்ட வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் குறிப்பிட்ட பேசி இருக்கிறார்.ஆனால் இதில் பின்னணியில் உள்ள காரணங்களை அந்தந்த மாநிலங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
ஆனால், வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவதற்கு மக் கள்தொகையும் ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. இதனால் மக்கள்தொகை அதிகமுடைய வடமாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாகவும் மக்கள்தொகை குறைவாக உள்ள தென்மாநிலங்களுக்கு குறைவான வரியும் வழங்கப்படுவதாகக் கூறி வருகின்றன. மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் கணக்கீடுகளை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. மேலும் மத்திய அரசு தன் ஆளும் மாநிலங்களில் மட்டும் அதிக நிதியை கொடுப்பதாகவும், தன் ஆளா மாநிலங்களில் நிதியை குறைவாக கொடுப்பதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகிறார் ஆனால் அவை உண்மை கிடையாது. உண்மையில் வரி பகிர்வு என்பது நிதிக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே முடிவு செய் யப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த 2014-15-ஆம் நிதி யாண்டில் தங்களுக்கு மத்திய அரசு வழங் கிய நிதி 18.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2021-22/2024-25 காலகட்டத் தில் இது 15.8 சதவீதமாக குறைந்துள்ள தாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களும் குற்றஞ்சாட்டின.எனவே, வரிப்பகிர்வு சதவீதத்தை மாற்றியமைக்க கோரும் தென்மாநிலங்கள் நிதிக் குழுவிடமே தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றார். மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்த 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்பிறகு இந்த விகிதத்தை 41 சதவீதமாக குறைக்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது.
Input & Image Courtesy: News