தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் உண்மையா? பதிவாகும் அதிக வழக்குகள்!

By : Bharathi Latha
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் 250 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழியாக கொண்டுவரப்பட்டது இதை அறிந்த போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனைகள் போலீசார் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த தெலுங்கானா மாநில காரை போலீசார் நிறுத்திய போது காரில் இருந்தவர்கள் காரிலிருந்து பயந்து தப்பி ஓடி சென்று விட்டனர்.இதனால் சந்தேகம் அடைந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காரை சோதனை செய்தனர் அதில் 250 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கார் யாருடைய பெயரில் உள்ளது என்றும் காரை ஓட்டி வந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அடுத்தடுத்த நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னணியில் போதை பொருள் குறிப்பாக கஞ்சா போன்ற பொருட்களின் பழக்க வழக்கங்கள் அதிகமாக இருந்து வருகிறது.
