Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: மத்திய அமைச்சகத்தின் பெயரில் போலி மோசடி விளம்பரம்!

பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: மத்திய அமைச்சகத்தின் பெயரில் போலி மோசடி விளம்பரம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Feb 2025 7:34 PM IST

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் ஒரு அமைப்பினால் ஆள்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுவதாகக் கூறப்படும் மோசடி விளம்பரங்கள் குறித்து அமைச்சகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறது. தேசிய ஊரக மேம்பாடு மற்றும் புத்துணர்ச்சி இயக்கம் (NRDRM) தனது அலுவலகம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை, புது தில்லி, 110001 என்ற முகவரியில் இயங்குவதாகக் கூறி ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அத்துடன் www.nrdrm.com(http://www.nrdrm.com) என்ற இணைய தளங்களையும் நடத்திவருகின்றது. இது மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு கிடையாது. இந்த அமைச்சகம் மற்றும்/அல்லது அதன் அதிகாரிகளின் பெயரில் தேசிய ஊரக மேம்பாடு மற்றும் புத்துணர்ச்சி இயக்கம்-NRDRM மேற்கொள்ளும் எந்தவொரு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும் மோசடியான செயலாகும். அமைச்சகம் எந்த ஒப்புதலையும் தரவில்லை என்றும் பொது மக்கள் இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை அல்லது விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவலும் கேட்கப்படுவதில்லை. மேலும், இந்தத் துறையில் ஆள்சேர்ப்பு பற்றிய தகவல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான rural.gov.in ல் இடம்பெறுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News