சர்ச்சையை கிளப்பிய பிரபல யூடியூபர்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

By : Bharathi Latha
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தங்கள் விரும்பியதை எல்லாம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சமூக வலைதள பிரபலம் ரன்வீர் அல்லாபாடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பீர் பைசப்ஸ் என்னும் youtube சேனல் மூலம் பிரபலமானவர் இவர்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர் ஒருவரிடம் கேட்ட கேள்வி வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பல்வேறு தரப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வரர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும் போது,உத்தரவு வரும் வரை சமூக வலைதளத்தில் இனிமேல் எந்த வீடியோவும் வெளியிடக்கூடாது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமுதாய நடைமுறைக்கு எதிராக தாங்கள் விரும்பியதை பேசுவதற்கு உரிமை கிடையாது. நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளால் சகோதரிகளும் பெற்றோர்களும் சமுதாயத்தில் உள்ள முழு பெண்களும் வெட்கப்படுவார்கள் இது வக்கிரகம் கொண்ட மனதின் வெளிப்பாடு.
இது அவர் மனதில் மிக மோசமாக அழுக்குகள் நிறைந்து இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.அவரது பெற்றோரைமையும் அவமானப்படுத்தி உள்ளது.கோர்ட் அனுமதி இல்லாமல் ரன்வீர் அல்லா பாடியா வெளிநாடு செல்லக்கூடாது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கைது செய்வதற்கு தடைவிதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
