சிறைக் கைதிகள் ஆபீஸ் ஒர்க் பார்க்கிறார்களா? ஐகோர்ட் கூறியது என்ன?

ஐகோர்ட் உத்தரவை மீறி தமிழக சிறையில் உள்ள கைதிகளை அலுவலகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன இதனால் நிர்வாக ரீதியான ரகசியங்கள் வெளியே கசியும் அபாயம் ஏற்படும். தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன நிர்வாகப் பணியாளர்களை மற்றும் காவலர்களை நியமித்து அலுவலக ரீதியான விவரங்கள் கைதிகளின் கடிதப் போக்குவரத்து அனைத்தையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.கடந்த மாதம் புழல் சிறை கோதண்டம் என்ற கைதி 30 நாள் பரோல் கேட்டு ஐகோர்ட்டை நாடியுள்ளார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் சிறை அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளில் உதவியாக இருப்பதாகவும் தனக்கு பரோல் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் தண்டனை கைதிகள் சிறை நிர்வாகத்தில் குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் போது அரசு ஊழியர்கள் ஊதியம் வாங்கிக் கொண்டு கைதிகளை ஈடுபடுத்துவது தவறான செயலாகும். இது சம்பந்தமாக தொடர்ந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை அளித்து உள்ளனர். இந்த உத்தரவை பொருட்படுத்தாமல், இன்னும் அலுவலகப் பணிகளிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்துவது தொடர்ந்து வந்துள்ளது.