இணையத்தில் வைரல் கெட் அவுட் ஸ்டாலின் ஹேஷ்டேக்: தொடங்கி வைத்த அண்ணாமலை!

கெட் அவுட் ஸ்டாலின் என சமூக வலைதளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர் கூறும் போது, திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் அதிகமாக நடக்கிறது. தற்போது உள்ள தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் ஆதிக்கம் மக்களிடையே அதிக அளவில் உள்ளது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஜாதி மற்றும் மத அடிப்படையில் ஆன பிரிவினையை வைத்து திமுக கட்சி, அரசியல் ஆட்சி நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத இந்த திமுக அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும்.
கெட் அவுட் ஸ்டாலின் என்று அவர் தொடங்கி வைத்துள்ள ஹேஷ்டேக் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுகவினர் கெட் அவுட் மோடி என்ற ஹாஷ்டேக் உடன் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் இதுவும் குறிப்பிடத்தக்கது.