கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக்: எக்ஸ் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததா?

எக்ஸ் ஸ்தலத்தில் திமுகவின் கெட் அவுட் என்று ஹேஸ்டக் வேகமாக பரவி வருகிறது. கெட் அவுட் மோடிக்கு போட்டியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னெடுத்த கெட் அவுட் ஸ்டாலின் 10 லட்சம் பதிவுகளை தாண்டி ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலக் கல்வித் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கூறும் பொழுது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது கோ பேக் மோடி என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை தமிழகம் வந்தால் மோடி கெட் அவுட் என்று தமிழக மக்கள் துரத்துவார்கள் என்று கூறினார்.இதனால் திமுகவினர் எக்ஸ் தளத்தில் கெட் அவுட் மோடி என்று ஹேஷ்டேக் பதிவிட்டனர். இது பாஜக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீங்கள் கெட் அவுட் மோடி என பதிவிடுங்கள். நான் சமூக வலைத்தளத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என பதிவிட போகிறேன் இதை மக்கள் எவ்வாறு வரவேற்கின்றனர் பார்ப்போம் என கூறுகின்றார். அதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என பதிவிட்டார் அண்ணாமலை.
அவரைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கெட் அவுட் என பதிவிட்ட தொடங்கினர் இதனால் இந்த பதிவு காலையிலிருந்து பிற்பகல் வரை முதலிடத்தில் இருந்தது. பிற்பகலில் இருந்து நடிகர் விஜயின் தா.வெ.க. கட்சியினர் டி.வி.கே பார் விங் என்ற ஹேஸ்டைக்கை ட்ரெண்டிங் செய்தனர்.இதனால் திமுகவினர் சற்று ஆறுதல் கொண்டனர்.