முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது உண்மையா?

நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தனர். 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறும் போது, பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் , தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை அவர்கள் கூறும் போது, தமிழகம் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணியை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ராகுல் காந்தி, தா.வெ.க தலைவர் விஜய் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.