பிரதமர் மோடி சிங்கத்தை புகைப்படம் எடுத்தாரா? உண்மை என்ன?

பிரதமர் மோடி கிர் வனவிலங்கு சரணாலயம் சென்று அங்குள்ள சிங்கங்களை, லயன் சபாரி மூலம் கேமராவில் புகைப்படம் எடுத்தார்.குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். வனவிலங்கு நாளான மார்ச் 3 அங்குள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்றார்.
கிர் சரணாலயத்தில் வனவிலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் லயன் சபாரி என்ற பயணத்தை மேற்கொண்டார். உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ளது, இந்த சரணாலயம்.இதற்காக அவர் திறந்தவெளி ஜீப்பில் பயணம் சென்று, கேமரா மூலம் வனவிலங்கு சரணாலயத்தில் நடமாடிய சிங்கங்களை போட்டோ கிளிக் செய்து, தனது எக்ஸ் வலைப் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக வனவிலங்கு நாள் என்பதால் ஆசிய சிங்கங்களின் தாயகம் கிர் வனவிலங்கு லயன் சபாரி சென்றேன். குஜராத் முதல்வராக நான் இருந்தபோது இங்கு வந்து பல பணிகளை செய்துள்ளேன் தற்பொழுது அதை நினைவுக்கு வருகிறது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மூலம், சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் மற்றும் அவர்களை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பெண்கள் பங்கு பாராட்டத்தக்கது. இதனால் தான் உயிரினங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.