தி.மு.க நம்மை ஏமாற்றி விட்டது: த.வெ.க. தலைவர் விஜய் செய்தி வெளியிட்டது உண்மையா?

திமுக அரசு நம் அனைவரையும் ஏமாற்றிவிட்டது, வரும் 2026 தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை மாற்றி விடுவோம் என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அம்மா, அக்கா தங்கை, தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்,எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
என்ன செய்வது நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே புரிகிறது. எல்லாம் ஒரு நாள் மாறக்கூடியது தானே, மாற்றத்திற்கு உரியது கண்டிப்பாக ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை உள்ளது.
2026 இல் நீங்கள்,நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய செய்வோம். மகளிர்க்கான பாதுகாப்பு குறைவாக உள்ள இந்த தமிழகத்தில் திமுக ஆட்சியை கண்டிப்பாக மாற்றுவோம். அதற்காக மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய மகனாக, தம்பியாக தோழனாக உங்களுடன் என்றும் நிற்பேன் இவ்வாறு விஜய் கூறினார்.