சிறையில் விற்பனை செய்யப் படுகிறதா கஞ்சா? வெளியான பகீர் என்ன?

By : Bharathi Latha
புழல் மத்திய சிறையில் உள்ள தண்டனை, விசாரணை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரம்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள விசார ணைப் பிரிவில் நேற்று முன்தினம் சிறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சுற்றுச் சுவர் அருகே கிடந்த பந்து போன்ற பொட்டலத்தை புதுக் கோட்டையை சேர்ந்த விசாரணை கைதியான மாதவன் எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றதைப் பார்த்த சிறைக் காவலர், அவரிட மிருந்த பொட்டலத்தை கைப்பற்றி பார்த்தபோது 90 கிராம் கஞ்சா 10 சிகரெட்டுகள் இருந்தன.
இதுகுறித்து சிறைக் காவலர் கள் மாதவனிடம் நடத்திய விசா ரணையில், சென்னை பெரியமேடு காவல் நிலைய எல்லையில் நடந்த அடிதடி வழக்கில் கைதான சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த உதயா அறிவுறுத்தலின் பேரில், சுற்றுச் சுவர் அருகே கிடந்த பொட்டலத்தை மாதவன் எடுத்துக் கொண்டு, அறைக்கு சென்றது தெரிய வந்தது.இது தொடர்பாக புழல் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு வெளியிலிருந்து அந்த பொட்டலத்தை வீசியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
