தி.மு.க கூட்டம்: இளைஞர்களுக்கு கூலிங் மதுபானத்துடன் அசைவ உணவு, இதுதான் திராவிட மாடலா?

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மது விருந்து, அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக திமுக வாக்குறுதிகளில் ஒன்றான மது ஒழித்துக் கொள்வதற்கு எதிராக இந்த நிகழ்வு அரங்கேறி இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில், இந்த ஒரு வீடியோவை தொடர்ச்சியான வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் அணி பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த செயல் அரங்கேறி இருக்கிறது. இது தொடர்பாக இளைஞர்களுக்கு கூலிங் மதுபானத்துடன் அசைவ உணவு, இதுதான் திராவிட மாடலா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தான் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக மாவட்ட மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் நிறைவின்போது, ஒரு தனியார் மண்டபத்தில் அசைவ விருந்துடன் கூடிய கூலிங் ஆன பீர் வழங்கப்பட்டதாகவும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image Courtesy: Source From X