காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லை: மாநிலங்களவை எம்.பி. பா.சிதம்பரம் கூறியது உண்மையா?

சல்மான் குர்ஷித், மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோரின் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார் குறிப்பாக அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்றும், பாஜகவிற்கு ஆதரவாகவும் பேசியிருக்கிறார். இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே உள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த ப. சிதம்பரம் அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "மிருதுஞ்சய் சிங் கூறியதுபோல் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. இந்தியா கூட்டணி அப்படியே இருப்பதாக அவர் பார்க்கிறார். ஆனால், எனக்கு அப்படி உறுதியாக தெரியவில்லை. இதற்கு சல்மான் குர்ஷித் மட்டுமே பதில் அளிக்க முடியும். ஏனென்றால் இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பிடித்திருந்தார். கூட்டணி முற்றிலும் உறுதியாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
தற்போது அப்படி உறுதியாக இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த கூட்டணியை இன்னும் ஒன்றாக இணைக்க முடியும். அதற்கு இன்னும் நேரம் உள்ளது" என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
Input & Image Courtesy:Swarajyamag News