அண்ணாமலை பற்றி வெளியான போலி தகவல்:இதுதான் உண்மை!

By : Sushmitha
400 பெண்களை கொன்று புதைத்த தர்மஸ்தலா கோவிலில் முதல்கட்டமாக 13 பிணங்கள் புதைக்கபட்டதாக, தட்சன கன்னடா மாவட்டத்தின் எஸ்பி அருண், முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அருன் இன்று வகித்த பதவியை முன்பு வகித்த தமிழர் சாட்சாத் அண்ணாமலை.பிணத்தை மறைத்த்தற்காக தான் அவரை பாஜகவில் சேர்த்தனர்! உண்மை சாகாது என்ற தகவல் சமூகவலைதள கணக்கில் வெளியாகி இருந்தது
இந்தத் தகவலை ஃபாக்ட்ஸ் மற்றும் ப்ராஸ்பெக்டீவ்ஸ் ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது அதாவது அண்ணாமலை அவர்கள் கர்நாடகாவில் காவல் துறையில் பணிபுரிந்தது உடுப்பி மற்றும் சிக்கமங்கலூருவில். அவர் விருப்ப ஓய்வு பெறும்போது பணியாற்றியது தெற்கு கர்நாடகாவின் டெபுட்டி கமிஸ்னராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தட்சின கன்னடா மாவட்டத்தில் தஅண்ணாமலை அவர்கள் தர்மசாலா மஞ்சுநாதா கோவில் பகுதியில் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்ததாக கூறியிருப்பதும் கர்நாடகா அரசும் ஊடகங்களும் நூற்றுக்கணக்கான பெண்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லும் போது எதன் அடிபடையில் 400 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக போலி தகவல் பதிவாகியுள்ளது என்பது தெரியவில்லை
மேலும் எஸ்பி அருண்தர்மஸ்தலா கோவிலில் முதல்கட்டமாக 13 பிணங்கள் புதைக்கபட்டதாக முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளார் என்று சொல்லியிருப்பதும் ஆதாரமற்ற செய்தி எனவும் எந்த வித ஆராய்வுமில்லாமல் அவப்பெயர் உண்டாக்கும் நோக்குடன் இது போன்ற போலிச் செய்திகளை பதிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமில்லாமல் குற்றமாகும் என தெரிவித்துள்ளது ஃபாக்ட்ஸ் மற்றும் ப்ராஸ்பெக்டீவ்ஸ்
