மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் பரவும் போலி செய்தி! வெளியான காரணம்!

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதை சாரத்தை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு என பாலிமர் செய்தி பெயரில் ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது.
இந்த பதிவை S.m. Hidayathullah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 9ம் தேதி வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகு பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வருமா? தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனை செய்யும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு என்று நியூஸ் கார்டு இருந்தது. அதனை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிய வருகிறது.
இதனை உண்மை செய்திகளை சரி பார்க்கும் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.