உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க வேட்பாளர் தாக்கப்பட்டதாக பரவி வரும் தகவல்!
Old image of assault on BJP leader shared as new
By : Kathir Webdesk
கிழிந்த உடையில், காயங்களுடன் அரசியல்வாதி ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்படுவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்துடன், அந்த அரசியல்வாதி பாஜகவைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.பஞ்சாபில் மேம்பாலத்தில் போராட்டக்காரர்களால் பிரதமர் மற்றும் அவரது கான்வாய் தடுக்கப்பட்டதையும் குறிப்பிட்டு, சோஷியல் மீடியா கேப்ஷன் கேலி செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஜனவரி 25 திங்கட்கிழமை, மீரட்டில் பாஜக வேட்பாளரின் வாகனம் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டது . மீரட்டின் சிவல்காஸ் சட்டமன்றத் தொகுதியின் சூர் கிராமத்தில் பாஜக வேட்பாளர் சவுத்ரி மனிந்தர்பால் சிங்கை உள்ளூர் மக்கள் தாக்க முயன்றதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன . இதுபோன்ற செய்திகளுக்கு மத்தியில் மேற்கண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
உண்மையில் வைரலாகும் புகைப்படம் உ.பி-யில் எடுக்கப்பட்டது அல்ல. அது ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தோடு தொடர்புடையது. ஜூலை 30,2021 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கனார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் பாஜக தலைவர் கைலாஷ் மேக்வாலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் பாஜக தலைவர் கைலாஷ் மேக்வாலின் ஆடைகள் கிழிந்தன. இப்போது இந்தப் படம் உ.பி.சட்டசபைத் தேர்தலின் மத்தியில் பாஜக தலைவருடன் இணைத்து பகிரப்பட்டு வருகிறது.