Kathir News
Begin typing your search above and press return to search.

திரிபுராவில் முஸ்லீம்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடந்ததாக பரவும் தகவல்! இப்படித்தான் மீடியாவை நம்பி ஏமாந்து போறோம்!

திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி நடத்திய தாக்குதல் என பகிரப்படும் படங்கள்

திரிபுராவில் முஸ்லீம்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடந்ததாக பரவும் தகவல்! இப்படித்தான் மீடியாவை  நம்பி ஏமாந்து போறோம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  6 Nov 2021 2:44 PM GMT

திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முஸ்லீம்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று Newsu Tamil பேஸ்புக் பக்கம் பதிவிட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.அதற்கு உண்மை செய்திகளை கண்டறியும் Fact Crescendo செய்தி நிறுவனம் ஆய்வு செய்து, அந்த தகவல் போலி என்பதை நிரூபித்துள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக இந்தியாவில் திரிபுராவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. அந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் ஒன்று டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தின் காட்சி என்று தெரிய வருகிறது. இதன் மூலம் இதற்கும் திரிபுரா வன்முறைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.


அடுத்ததாக சாலையில் கட்டைகளைப் போட்டு எரிக்கும் புகைப்படம் 2019-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநில தலைநகர் குவாஹாட்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்த புகைப்படமும் திரிபுராவுடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.


அடுத்து கார் எரியும் புகைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்ட போது தீ வைத்து எரிக்கப்பட்டது என்று செய்தி ஊடகங்களில் இந்த படத்தை பகிர்ந்திருந்தனர்.


இதன் மூலம் திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று பகிரப்படும் படங்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் திரிபுரா தாக்குதல் படம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News