ஒரு கப் டீ-க்கு ரூ.70 வசூல் செய்தது ஏன்? ரயில்வே ரூல்ஸ் தெரியாமல் ஊடகங்கள் பரப்பிய வதந்தி! பயணியின் தவறே அது!

By : Kathir Webdesk
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இருந்து டெல்லிக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி சதாப்தி விரைவு ரயில் சென்றது. அதில், பயணித்த நபர், ஒரு கப் டீ-க்கு ரூ.70 கட்டணமாக செலுத்தியுள்ளார். இதற்கான பில்லையும் ரயில் பணியாளர்கள் வழங்கினர். பயணி அந்த பில்லை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அது வைரல் ஆனது.
பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில் அதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதே உணவு மற்றும் பானங்களுக்கும் பதிவு செய்துவிட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் பயணத்தின் போது நீங்கள் வாங்கும் டீ, காஃபி அல்லது உணவு போன்றவற்றுக்கு சேவைக் கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்படும் என்று அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் உணவு ஆர்டர் என்பது கட்டாயமாக இருந்திருக்கிறது. அது விருப்பத்திற்கு உரியதாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு தான், முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் பயணிகளிடம் சேவைக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
Input From: News18
