Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினாரா? - உண்மை என்ன?

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், வங்கிக்கணக்கில் பிரதமர் 15 லட்சம் செலுத்துவதாக கூறிய தகவல்களை பரப்பி வரும் பொய்க் கூட்டம்.

வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினாரா? - உண்மை என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Aug 2022 1:45 AM GMT

தற்போதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தஙகள் பிரச்சாரத்தின் போது எடுத்துக் கொண்டு வரும் முக்கியமான கருத்தாக, பிரதமர் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அது இதுவரை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் எதிர்கட்சிகள். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. குறிப்பாக தமிழக பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்ட பிரஸ்மீட்டில், இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அண்ணாமலை அவர்கள் சரியான பதிலடி கொடுத்தார். மோடி கூறினார் என்பதற்கு எந்த ஆதாரம் உங்களிடம் இருக்கிறது? வீடியோவை காட்டுங்கள் என்று கேட்டார். இல்லையெனில் அடுத்த பிரஸ்மீட்டில் நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். உண்மையில் உங்களிடம் ஆதாரம் இல்லை, ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது.


இதைப் பற்றி தற்போது வீடியோவை வெளியிட்டுள்ள APB செய்தி நிறுவனம், பிரதமர் இரு இடங்களில் பிரச்சார கூட்டத்தின்போது இதுதொடர்பான பேசிய வீடியோக்களை பதிவிட்டு உள்ளார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு குஜராத்தில் பேசிய வீடியோ பதிவு தான். அதில் பிரதமர் கூறுகையில், வெளிநாட்டில் இருக்கும் இங்குள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு 15 முதல் 20 லட்சம் வரை கொடுக்கலாம். அந்த அளவிற்கு பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கொடுக்கலாம் என்றுதான் கூறினாரே, தவிர கொடுக்கிறேன் உங்களுக்கு வங்கி கணக்கில் என்று எந்த ஒரு இடத்திலும் பதிவு செய்யவில்லை.



மற்றொரு பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், இந்த நாட்டில் உள்ள மாத சம்பளம் வாங்கும் ஏழை மக்கள் ஜனநாயகத்திற்கு உண்மையாக வருடாவருடம் வருமான வரி செலுத்துகிறார்கள். ஆனால் இங்கிருந்து கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. எனவே நிச்சயமாக வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவேன். அவற்றை இங்குள்ள ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பேன் என்று கூறியுள்ளார். அது 15 ரூபாயாக இருக்கலாம் அல்லது 15 லட்சமாக இருக்கலாம் என்ற அந்த பிரச்சாரத்தில் அவர் கூறியிருக்கிறார். ஆனால் எந்த வாக்குறுதியும் பிரதமர் அவர்கள் கொடுக்கவில்லை. உங்களிடம் வேண்டுமானாலும் வீடியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரதமர் அவர்கள் அதை குறிப்பிடவில்லை என வீடியோ இருக்கிறது.

Input & Image courtesy:APB News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News