Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் வாகனம் ஆம்புலன்ஸ்சுக்கு வழி விடாததால் நோயாளி பரிதாபமாக இறந்தாரா? உண்மை இதோ!

PM Modi's rally, roads were blocked, patient died in agony in ambulance

பிரதமரின் வாகனம் ஆம்புலன்ஸ்சுக்கு வழி விடாததால் நோயாளி பரிதாபமாக இறந்தாரா? உண்மை இதோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2022 2:30 PM GMT

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 10, 2022) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) மற்றும் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கிடையில், பிரதமர் மோடியின் வாகன கான்வாய் காரணமாக, ஆம்புலன்சில் ஒருவர் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

ஒரு ட்வீட்டில், "சஹாரன்பூரில், மோடி ஜியால் ஆம்புலன்சில் ஒருவர் இறந்தார். இறந்தவரின் மகள் போலீசிடம் கெஞ்சினார். ஆனால் ஆம்புலன்ஸ் செல்ல வழி விடவில்லை, நோயாளி ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக இறந்தார்" என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சஹாரன்பூர் வருகையின் போது ஆம்புலன்சில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படும் ட்வீட் ஆதாரமற்றது என்று கூறிய உ.பி காவல்துறை, வைரலான தகவலை மறுத்துள்ளது. ஆம்புலன்சில் தனது தாயின் சடலம் இருப்பதாக பணியில் இருந்த காவல்துறையினரிடம் ஒரு சிறுமி புகார் அளித்து, அதற்கு வழிவிடுமாறு வலியுறுத்தினார். உடனடியாக வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என்றனர்.

வைரலான ட்வீட் உண்மை சரிபார்க்கும் வகையில் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உ.பி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி சஹரன்பூருக்கு வந்தவுடன், அவரது பாதுகாப்புக்காக டேராடூன் சௌக்கில் சட்டம்-ஒழுங்கு பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஒரு பெண் ஆம்புலன்சில் இருந்து இறங்கி, மருத்துவமனையில் சிகிச்சையின் போது அம்மா இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், உடனடியாக அவரது ஆம்புலன்சை கூட்டத்திலிருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். மேலும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் இதுபோன்ற ட்வீட்/செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேம் என குறிப்பிடப்பட்டுள்ளது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News