Kathir News
Begin typing your search above and press return to search.

வாகன ஓட்டியின் முகத்தில் டார்ச் அடித்து நிறுத்தி கொள்ளை முயற்சி - பரவி வரும் வைரல் வீடியோ குறித்து போலீஸ் எச்சரிக்கை!

வாகன ஓட்டியின் முகத்தில் டார்ச் அடித்து நிறுத்தி கொள்ளை முயற்சி - பரவி வரும் வைரல் வீடியோ குறித்து போலீஸ் எச்சரிக்கை!

வாகன ஓட்டியின் முகத்தில் டார்ச் அடித்து நிறுத்தி கொள்ளை முயற்சி - பரவி வரும் வைரல் வீடியோ குறித்து போலீஸ் எச்சரிக்கை!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  23 Feb 2021 1:37 PM IST

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றதாகக் கூறி, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வாட்ஸ்ஆப் ஆடியோவுடன் ஒரு வீடியோவும் இணைத்து பார்வேர்ட் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒட்டி வரும் ஒரு வாகன ஓட்டியின் கண்ணில் ஹை-பீம் டார்ச் லைட் அடித்து, வாகனத்தை நிறுத்தி, சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகின்றனர். நிலையை சுதாரித்துக்கொண்டு வாகன ஓட்டி உடனடியாக காரை பின்னால் இயக்கி அங்கிருந்து தப்பிக்கிறார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் வடஇந்தியர்களைப்போலத் தெரிகிறது.

இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் நடந்ததாக வீடியோக்கு கீழ் பகிரப்படும் ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டியின் முகத்தில் டார்ச் அடித்து நிறுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபடுவது போன்று பரவும் வீடியோ குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

இந்த வீடியோ விக்கிரவாண்டி பகுதி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், வீடியோ குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் போலீசார்.

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த இடத்தில், அந்த தேதியில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்கின்றனர் காவல் துறையினர் தரப்பினர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர் ஏன் காவல்துறையினரிடம் புகாரளிக்காமல், நேரடியாக வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். உறுதியான விவரங்கள் இல்லாத வீடியோக்களை சமூக வலைதலங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News