தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக வைரலாகி வரும் போலி செய்தி!
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட்
By : Muruganandham
"பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்கள் விழாவான மகர சங்கராந்தியை கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக IBC தமிழ் ஊடகத்தின் நியூஸ்கார்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
உண்மை சரிபார்ப்பு:
"பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல" என்று அண்ணாமலை கூறியதாக பகிரப்படும் நியூஸ்கார்டு குறித்து, IBC தமிழ் ஊடகத்தின் சமூக வலைதள பக்கங்களில் தேடிப்பார்க்கப்பட்டது. முடிவில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம்.
"எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது" என்று அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே உள்ள படத்தில் காணலாம்.
இதனையடுத்து அண்ணாமலை தரப்பில், பிரவீன் பிரபாகரை நியூஸ் செக்கர் ஊடகம் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டனர். அவர், இத்தகவல் பொய்யானது, இவ்வாறு அண்ணாமலை எவ்விடத்திலும் பேசவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
ஆகவே பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகிறது.