Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் நரேந்திர மோடி மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறாரா? சோஷியல் மீடியா தகவலை நம்பி ராகுல் காந்தி சொன்ன கருத்து!

பிரதமர் நரேந்திர மோடி மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறாரா? சோஷியல் மீடியா தகவலை நம்பி ராகுல் காந்தி சொன்ன கருத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Aug 2022 12:49 AM GMT

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 11, 2022 அன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதை நிறுத்துங்கள். உங்கள் செயல்களை மறைக்க மூடநம்பிக்கையான விஷயங்களைப் பேசி நாட்டை தவறாக வழிநடத்துங்கள் என கூறி இருந்தார். அதாவது பிரதமர் மூட நம்பிக்கையை ஊக்குவிப்பதாக கூறி இருந்தார்.

உண்மை என்ன?

ரூ.900 கோடி மதிப்பிலான எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக, ஆகஸ்ட் 10, 2022 அன்று, வீடியோ கான்பரன்சிங் மூலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் YouTube வீடியோவைக் கண்டோம் .

மாநாட்டின் போது பிரதமர் மோடி பேசுகையில், "ஆகஸ்ட் 5ஆம் தேதி நாட்டில் சூனியம் செய்யும் மனநிலையை பரப்பும் முயற்சி நடந்தது. கறுப்பு ஆடை அணிவதன் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். சூனியம் செய்தாலும் பொதுமக்களின் நம்பிக்கையை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. அரசுக்கு எதிராக பொய் சொன்னாலும், இதுபோன்றவர்களை பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை என பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தனது உரையின் மூலம் 2022 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை குறிப்பிட்டு பேசினார்.

எனவே, பிரதமர் நரேந்திர மோடி எந்த மூட நம்பிக்கையையும் ஊக்குவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இந்திய இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த விஷயத்தை திரிபுபடுத்தி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News