கொரோனா சிகிச்சைக்காக ரூ.4,000 வழங்கப்படுவதாக பரவி வரும் செய்தி! இட்டுக்கட்டி திணிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டம்!
Rs 4,000 To Be Granted Under 'PM Ramban Yojana' for COVID-19 Treatment? PIB Fact Check Reveals Truth Behind Fake Website
By : Muruganandham
ஒரு வைரஸ் செய்தியில், மத்திய அரசு 'பிஎம் ராம்பன் யோஜனா' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், அதன்படி பொதுமக்கள் கோவிட்-19 சிகிச்சைக்காக பதிவு செய்யும் போது மக்கள் ரூ. 4000 பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
அந்த இணையதளம் மற்றும் அது கூறிய அனைத்து தகவல்களும் போலியானவை என்று பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் எதையும் அரசு செயல்படுத்துவதில்லை. இந்த திட்டம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு
அனைத்து அரசாங்க இணையதள URLகளும் 'gov.in' அல்லது 'nic.in' என முடிவடையும். ஆனால் அந்த இணைப்பில் அப்படி இல்லை. போலியான இணையதளத்தின் வடிவமைப்பை கொண்டுள்ளது.இணைப்பைக் கிளிக் செய்தால், 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
பல பயனர்கள் பதிவு இணைப்பைப் பயன்படுத்தி ரூ 4,000 பெற்றதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இணைப்பைக் கிளிக் செய்யும் போது, அவர்களின் தொலைபேசி எண்ணைக் கேட்கும். இதைத் தவிர, இந்தத் திட்டத்தைப் பற்றி வேறு எந்த இணைப்பும் அல்லது வேறு எந்த தகவலும் இல்லை.இது போலியான இணையதளம் என்பதை மத்திய அரசே உறுதி செய்துவிட்டது.