8 வழிச்சாலை போடக்கூடாது என தி.மு.க கூறவே இல்லையா? அப்போ இதென்ன? ஏகத்துக்கும் அளந்துவிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் "8 வழிச்சாலை போடக் கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொன்னதில்லை" என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
உண்மை என்ன?
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் 2018 ஆகஸ்ட் 21-ம் தேதி நிலம் கையகப்படுத்தத் தடை விதித்தபோது அதனை வரவேற்பதாகவும், விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது! இனியாவது, மாற்றுவழி குறித்துச் சிந்திக்க வேண்டுமென ட்விட் செய்திருந்தார்.
2021 சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு தனியாக 5 வாக்குறுதிகளையும் வெளியிட்டிருந்தது. அதில் சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்தே அமைச்சர் பேசியது பொய் என்பதை அறிந்து கொள்ளலாம்.