அறிக்கையை படித்து செய்தி வெளியிடக்கூடவா தெரியவில்லை? அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை திசை திருப்பும் "நியூஸ் 7" ஊடகம்!

சி. பி. ஐ விசாரணை நடந்து வரும் நிலையில், அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என நியூஸ் 7 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.
உண்மையில் அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களை முழுவதுமாக படித்து உள்வாங்காமல், ஒரு தரப்பினருக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், ஒருதலை பட்சமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட முழு அறிக்கையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதில் நியூஸ் 7 ஊடகம் சொல்கின்ற கருத்து முற்றிலும் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு முரணாக இருக்கிறது.
பள்ளி மீது, முறையாக விசாரணை செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த குழந்தையை ஆணையம், காவல்துறையால் கடும் மன உளைச்சலில் இருக்கும் அந்தக் குடும்பத்தினரை சகஜ நிலைக்கு கொண்டு வர கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற ஒரு வரியை தவறாக வெளியிட்டுள்ளது நியூஸ் 7 தொலைக்காட்சி.