Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரிகள் அல்லாத மக்கள் கொலை! காவல், இராணுவ பாதுகாப்புக்கு மாற்றப்படுவதாக வெளியாகும் பகீர் தகவல்! உண்மை நிலை என்ன?

The reports of the directive by IGP Kashmir had come hours after terrorists killed two labourers from Bihar in Kulgam and injured a third one

காஷ்மீரிகள் அல்லாத மக்கள் கொலை! காவல், இராணுவ பாதுகாப்புக்கு மாற்றப்படுவதாக வெளியாகும் பகீர் தகவல்! உண்மை நிலை என்ன?
X

MuruganandhamBy : Muruganandham

  |  18 Oct 2021 1:40 AM GMT

காஷ்மீர் மாநிலத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து வேலை செய்வோரும், காஷ்மீரில் வாழும் அம்மாநில மக்கள் அல்லாத தொழிலாளர்கள் மீது மீண்டும் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் அல்லாத மற்ற மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் காவல் நிலையங்கள், இராணுவம் மற்றும் சிஏபிஎஃப் முகாம்களுக்கு மாற்றுமாறு மாநில டிஐஜிகளுக்கு ஐஜிபி உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியை காஷ்மீர் போலீசார் மறுத்துள்ளனர்.

காஷ்மீர் காவல்துறை அவசர உத்தரவை முற்றிலும் ஆதாரமற்ற போலி உத்தரவு என்று கூறியுள்ளது. அதனை ஐஜிபி காஷ்மீர் செய்தி நிறுவனமான கேஎன்ஓ-விடம் கூறினார்.

முன்னதாக, காஷ்மீர் காவல்துறை ஐஜிபி யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் அல்லாத அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டு அறிவுரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவின் படி, அனைத்து காஷ்மீர் மண்டல போலீஸ் நிறுவனங்களும் உள்ளூர் அல்லாதவர்களை உடனடியாக காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.





கடிதத்தின் மேலே "மிக அவசரம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் விஷயம் மிகவும் அவசரம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதே தவிர, காஷ்மீர் அல்லாதவர்களை இப்போதே" பாதுகாப்பு தளங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்ட தகவல் உண்மையில்லை.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த குல்காம் மாவட்டத்தின் வான்போவில் உள்ள ஒரு வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காஷ்மீர் ஐஜிபியின் இந்த உத்தரவின் அறிக்கைகள் வந்தன. இந்த தாக்குதலில் ஜோகிந்தர் ரேஷி தேவ் மற்றும் ராஜா ரேஷி தேவ் கொல்லப்பட்டனர், சுஞ்சுன் ரேஷி தேவ் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காஷ்மீரில் உள்ளூர் அல்லாதவர்கள் மீது நடத்தப்பட்ட இலக்குத் தாக்குதலின் தொடர்ச்சியாக, பீகார் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த இருவர் நேற்று ஸ்ரீநகர் மற்றும் புல்வாமாவில் கொல்லப்பட்டனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News