Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி அரசின் வேட்டை - கலவரத்தை தூண்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு செல்லும் புல்டோசர்கள்

திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபடும் கலவரக்காரர்கள் வீடு குறிவைத்து எரிக்கப்படுவதால் தற்பொழுது கலவரக்காரர்கள் யோகி அரசின் மீது பயத்தில் உள்ளனர், ஆனால் ஊடகத்தில் யோகி அரசு வீடுகளை வேண்டுமென்றே இடிக்கிறது என்ற உள்நோக்கத்துடன் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

யோகி அரசின் வேட்டை - கலவரத்தை தூண்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு செல்லும் புல்டோசர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  12 Jun 2022 11:30 AM GMT

திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபடும் கலவரக்காரர்கள் வீடு குறிவைத்து எரிக்கப்படுவதால் தற்பொழுது கலவரக்காரர்கள் யோகி அரசின் மீது பயத்தில் உள்ளனர், ஆனால் ஊடகத்தில் யோகி அரசு வீடுகளை வேண்டுமென்றே இடிக்கிறது என்ற உள்நோக்கத்துடன் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் பற்றி தரக்குறைவாக பேசினார் என கூறி உள்நோக்கத்துடன் கலவரத்தை நாடு முழுவதும் சிலர் பரப்பி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கலவரம் மட்டும் அதனை தொடர்ந்து வன்முறை காட்சிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது அதில் இதுவரை 304 பேர் கைதாகியுள்ளனர்.

ப்ரயாக்ராஜில் மட்டும் 91 நபர்கள், சஹரன்பூர் 70 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கலவரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசகர் மிருத்தஞ்சய குமார் அளித்த பேட்டியில், 'பொய்யான கூட்டங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம், எல்லா வெள்ளிக்கிழமைக்கு பிறகும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை மறக்க வேண்டாம்' என இஸ்லாமியர்களின் போராட்டத்தை விமர்சித்துள்ளார்.

மேலும் முசாமில் மற்றும் அப்துல் வக்கீர் ஆகியோரின் வீடுகள் இடிக்கப்பட்டன, அவர்கள் வீட்டின் சில பகுதிகள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் ப்ரயாக்ராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவேத் முஹம்மது என்பவர் வீட்டின் முன் பகுதி இடிக்கப்பட்டது. இவர்கள் தன கலவரத்திற்கு சூத்திரமாகவும், வன்முறை ஏற்பட காரணமாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தை முன்னெடுத்து அவர்களின் முக்கியமான நபர் ஆவார் இவர் ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதாக புகாரின் பேரில் அவரது வீட்டின் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பாவிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைத்தளங்களில் யோகி மீது அவதூறு பரப்புகின்றனர்.

Data Source - One One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News