அவங்களுக்கு அங்கிருந்து பணம் வருது! வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் சமூக விரோத கும்பல்!
அவங்களுக்கு அங்கிருந்து பணம் வருது! வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் சமூக விரோத கும்பல்!

By : Muruganandham M
சென்னை பூந்தமல்லி சாலையில் விளம்பர போர்டு கழன்று விழுந்து வாகன ஓட்டிகள் பலியானதாக கடந்த இரு தினங்களாக இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் வேகமாக பரப்பபட்டது. கடைசியில் பார்த்தால் அது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது. இணைய தளத்தில் இருந்து, பழைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் ஆசாமிகள் சிலர் புதிது போல வாட்ஸ் அப்பில் பகிர்ந்து மக்களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி மீது குறை சொல்லும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த சமூக வலைதள பக்கங்களில் இது போன்ற வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதை காண முடிகிறது. பாகிஸ்தான் வீடியோவுக்கு அடுத்து, சென்னை அசோக் நகர் காசி தியேட்டர் அருகே அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து முதல்மாடி மூழ்கியதாக ஒரு வீடியோ பகிரப்பட்டது.
உண்மையில் இந்த வீடியோ 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையின் பெரு வெள்ளத்தின் போது மெட்ரோ ரெயிலில் இருந்து எடுக்கப்பட்டது. இதனை காலத்திற்கு ஏற்ப மாற்றி தற்போது எடுக்கப்பட்டது போன்று வாட்ஸ் அப்பில் பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கின்றது சமூக விரோத கும்பல். எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தாமல் தெரிந்தவர்களும், நண்பர்களுக்கும் தகவலை அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திய பின்னர் அதனை வாட்ஸ் அப்பில் பகிர்வதன் மூலம் இக்கட்டான இந்த நேரத்தில் பரவும் வீணான வதந்திகளை தவிர்க்கலாம்
