"கொத்தடிமை தி.மு.க ஆட்சியில் மிக மோசமான நிலையில் சட்ட ஒழுங்கு" என பரவி வரும் வீடியோ!
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?
By : Muruganandham
பேருந்து ஓட்டுநரை வாலிபர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு கீழே "கொத்தடிமை திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் கெட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலாகும் வீடியோவில், பேருந்து ஓட்டுநரை வாலிபர் ஒருவர் தாக்குகிறார். நடத்துநர் அதைத் தடுக்க முயற்சி செய்வது போல உள்ளது. இந்த வீடியோவில் வருபவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. அவர்கள் அணிந்திருக்கும் சீருடையை பார்த்தால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் போல இல்லை.
தமிழ்நாட்டில் தான், இந்த சம்பவம் நடந்ததா? என்பதற்கு வீடியோவில் எந்த நம்பகமான ஆதாரமும் கிடைக்கவில்லை. வேறு எங்குமே தெளிவான வீடியோ இல்லை. எனவே, உண்மையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில், தற்போது நடந்ததுதானா என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது.
வீடியோ காட்சிகளை வைத்து தேடிப்பார்த்ததில், இந்த வீடியோ 2018ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. இது கேரளாவில் நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
பாலக்காடு அருகே திருமண விழாவுக்கு சென்ற வாகனத்தின் மீது அரசுப் போக்குவரத்து கழக பேருந்து லேசாக இடித்துள்ளது. இதனால் திருமணத்துக்குச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கினர். அந்த வீடியோவே தற்போது பகிரப்பட்டு வருவது உறுதியாகிறது.