திருப்பதி அர்ச்சகர் வீட்டில் சிக்கிய 150 கோடி பணம் 128 கிலோ தங்கம்: உண்மை நிலவரம் என்ன?
திருப்பதி கோவிலின் அர்ச்சகர் வீட்டில் சிக்கியதாக கூறிய 150 கோடி பணம் 128 கிலோ தங்கம் - உண்மையான பதிவு தான் என்ன?
By : Bharathi Latha
கடந்த நாட்களாக சமூக வலைதளங்களில் திருப்பதி கோவிலின் அர்ச்சகர்கள் வீட்டில் சிக்கியதாக 150 கோடி பணம் 128 கிலோ தங்கம் என்று கூறி வெளியாகும் வீடியோ மிகவும் வைரலாகி வந்திருக்கிறது. ஆனால் இந்த வீடியோ காட்சிகள் வரும் பதிவுகள் ஏற்கனவே எங்கேயோ பார்த்த மாதிரி நம் கண்களுக்கு தோன்றலாம். அது பற்றியான உண்மை பதிவு என்ன என்பதை தான்? நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் வரும் அந்த வீடியோ காட்சிகளின் மேஜையின் ஒரு நீண்ட வரிசையில் தங்க வைர நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பதி கோவிலின் பணி மற்றும் 16 அச்சகர்களை சேர்ந்த ஒரு அச்சுக்கர்களின் வீட்டில்தான் வருமானவரித்துறை சோதனை நடத்தியதாகவும், அந்த சோதனையில் பிடிபட்ட நகை மற்றும் பணத்தை தான் தற்போது இந்த வீடியோவில் காண்பிக்கப்படுவதாகவும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் வரும் காட்சி பதிவுகள் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அன்று வேலூரில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் தங்க நகை ஜுவல்லரியில் சுவரில் துளைகள் போட்டு திருடப்பட்ட நகைகள் தான்.
டிசம்பர் 20ஆம் தேதி அன்று அந்தக் கொள்ளைக்காரர்கள் காவல்துறையிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள். அப்போது காவல்துறை அதிகாரிகள் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது தான், கைப்பற்றிய நகைகளை மேஜையின் மீது வைத்து இருக்கும் அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது வைரல் ஆக்கி வருகின்றது. இவை தவறாக பெயரிடப்பட்டு அர்ச்சக அச்சகரின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நகைப்பணத்தின் வீடியோ என்று தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Input & Image courtesy:Vikatan