தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் உண்மையா? தமிழக காவல்துறை பதில் இதுதான்!
சமூக வலைத்தளங்களில் வட இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் போலியானவை என்று DGP அவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
தமிழகத்தில் தற்பொழுது ஹிந்தி பேசும் வடமாநிலங்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்று இரண்டு வீடியோக்கள் கடந்த சில இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டது. இதனை அறிந்து காவல்துறையினர் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அந்த வீடியோவை பதிவு செய்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். தமிழக காவல்துறை உடனடியாக அந்த வீடியோவிற்கு மறுப்பு தெரிவித்து அவை போலியானவை என்று தற்பொழுது கூறுகிறது.
இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சமூகவலைத்தளங்களில் இரண்டு போலியான வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல தாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோக்கள் தவறானவை மற்றும் போலியானவை. இரண்டு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை தத்ரூபமாக திரித்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரண்டு பிரிவுகளாக மோதிக் கொண்டனவாகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர் வாசிகள் மோதிக்கொண்டது ஆகும். இதுதான் உண்மையான தமிழக சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் தவறான உங்களுக்காக பகிர வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார் .
Input & Image courtesy: Nakkheeran News